Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News


தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சத்தீஸ்கர் அரசியலை சாய்த்த மதுபானம், தெலுங்கானாவில் கவிதா அரசியலை கவழ்த்த மதுபானம், டில்லியின் கெஜ்ரிவால் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுபானம், தமிழகத்தில் விடியல் ஆட்சிக்கு விடை

கொடுக்குமோ... ஆக, மது வீட்டுக்கு, நாட்டுக்கு, ஆட்சிகளுக்கும் கேடுதான்.

மது விற்பனையால், 'வாழ்ந்தவங்க' சில ஆயிரம் பேராதான் இருப்பாங்க... ஆனா, அதை குடித்து வீழ்ந்தவங்க லட்சக்கணக்கில் இருப்பாங்களே... அந்த குடும்பங்களின் சாபம், ஆட்சியை காவு வாங்காம விடுமா?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'ஒருவனுக்கு ஒருத்தி என்பது, தமிழன் கலாசாரம். ஐந்து பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தி என்பது வடமாநில கலாசாரம்' என, அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழன் கலாசாரம் என்றால், மனைவி, துணைவி என தமிழன் கலாசாரத்தில் இல்லாத விஷயத்தை, அரசியலில் புகுத்திய திராவிட கலாசாரத்தின் திருவுருவமாய் திகழும் உங்கள் முன்னோடிகளை என்னவென்று அழைப்பது?

'சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி' கதையாக, துரைமுருகன் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கியிருக்க வேண்டாம்!



ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை: காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாயம் மொத்தமாக முடிக்கப்பட்டு விடும் அபாயத்தில் உள்ளது. அந்த காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டிய என் கோரிக்கைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இரண்டு மாதங்களாக காத்திருந்தேன். எனக்கு லோக்சபாவில் கிடைத்ததோ, வெறும் ஒரு நிமிடம் தான். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்ற உறுதியோடு மிக சுருக்கமாக பேசினேன்.

கட்சி பலத்தின் அடிப்படையில் தான் பேச நேரம் ஒதுக்குவாங்க... நீங்க ஒற்றை எம்.பி.,யா தனி சின்னத்தில் ஜெயிச்சதால் தான் இந்த பிரச்னை... தி.மு.க., சின்னத்தில் ஜெயித்திருந்தால், நிறைய நேரம் பேசியிருக்கலாமே!



தமிழக காங்., சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அறிக்கை: ஹஜ் யாத்ரீகர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை விமான நிலையம் அருகில், 1 ஏக்கரில், 65 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தமிழக ஹஜ் இல்லம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நாசர் ஆகியோருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றி.

இது மட்டுமா...? தேர்தல் நெருங்க நெருங்க, உங்களுக்கு இன்னும் நிறைய திட்டங்கள் வரும் பாருங்க!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us