Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'விவரமா இருக்காங்களே இந்தம்மா...'

 'விவரமா இருக்காங்களே இந்தம்மா...'

 'விவரமா இருக்காங்களே இந்தம்மா...'

 'விவரமா இருக்காங்களே இந்தம்மா...'

 'விவரமா இருக்காங்களே இந்தம்மா...'

PUBLISHED ON : பிப் 03, 2026 02:56 AM


Google News
Latest Tamil News
கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு உள்ளது. இவ்வளாகத்தில், மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை விற்க, 'மதி அங்காடி'யை திறந்து வைத்த கோவை தி.மு.க., - எம்.பி., ராஜ்குமாரை, விற்பனையை துவக்கி வைக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அவரும் ஏதேனும் ஒரு பொருளை வாங்க எண்ணி, கடையை சுற்றி பார்த்தார். ஒரு கடையில் இருந்த மணிமாலையைப் பார்த்தவுடன், அருகில் நின்றிருந்த மாநகராட்சி மண்டல தலைவர் மீனாவை பார்த்து, 'மீனாவுக்கு, மணி சரியாக இருக்கும்' என, கிண்டல் அடித்தார்.

அவரோ சளைக்காமல், 'அண்ணா... மணி அடிக்கிறது தப்பில்லை... ஜால்ரா தான் அடிக்கக் கூடாது...' என, சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டதால், வேடிக்கை பார்த்த அதிகாரிகள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

இதை பார்த்த தி.மு.க., தொண்டர் ஒருவர், 'விவரமான மண்டல தலைவர் தான் இந்தம்மா...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.