/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மேயர் உஷாரா இருக்காங்கப்பா!'

 'மேயர் உஷாரா இருக்காங்கப்பா!'

 'மேயர் உஷாரா இருக்காங்கப்பா!'

 'மேயர் உஷாரா இருக்காங்கப்பா!'

 'மேயர் உஷாரா இருக்காங்கப்பா!'

PUBLISHED ON : பிப் 04, 2026 04:48 AM


Google News
Latest Tamil News
தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று பேசினார்.

அவர் வருவதற்கு முன், எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். சென்னை மேயர் பிரியா தன் இருக்கைக்கு வந்து அமர்ந்ததும், அருகில் இருந்த ஆர்.கே., நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசரிடம் சிரித்து பேசி கொண்டிருந்தார்.

இதை பார்த்த, 'யு டியூப்' உள்ளிட்ட ஊடகத்தினர், அவர் பக்கமாக கேமரா, மொபைல் போன்களை திருப்பி, சிரிப்பை பதிவு செய்து கொண்டிருந்தனர். இதை கவனித்த மேயர் சட்டென சிரிப்பை நிறுத்தி, தன் முன் இருந்த நாளிதழ் ஒன்றை எடுத்து, முகத்தின் முன் வைத்துக் கொண்டார்.

இதை பார்த்த நிருபர் ஒருவர், 'மேயர் ரொம்ப உஷாரா இருக்காங்கப்பா...' என கூற, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.