Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/'ராஜாவுக்கு இது தெரியாதா?'

'ராஜாவுக்கு இது தெரியாதா?'

'ராஜாவுக்கு இது தெரியாதா?'

'ராஜாவுக்கு இது தெரியாதா?'

PUBLISHED ON : பிப் 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து விமர்சித்த நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முன்னாள் சபாநாயகர் தனபால் பேசுகையில், 'ராஜாவுக்கு வரலாறு தெரியாது. தி.மு.க., பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., குறித்தும் தெரியாது. கடனில் தவித்த கருணாநிதி குடும்பத்துக்காக, எங்கள் தங்கம் படத்துக்கு, சம்பளமில்லாமல் எம்.ஜி.ஆர்., நடித்து கொடுத்ததும் தெரியாது. எந்த வரலாறும் தெரியாமல், எம்.பி., ராஜா கண்டபடி உளறிக் கொண்டிருக்கிறார்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'எம்.ஜி.ஆரை சீண்டினால்,பதிலுக்கு நம்மை சீண்டாமல், கருணாநிதியை அ.தி.மு.க.,வினர் சீண்டுவாங்க என்பது கூட ராஜாவுக்கு தெரியாதா...?' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us