PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM

திருப்பூரில், வளர்ச்சி பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அப்போது அமைச்சர் வேலு காரில், சாமிநாதன் பயணித்தார்.
அமைச்சர்கள் சென்ற கார், திருப்பூர் நகருக்குள் மின்னல் வேகத்தில் செல்ல, சாமிநாதன் காரை, அதன் டிரைவர் பின்தொடர்ந்து வேகமாக சென்றார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அணிவகுப்பாக கார்கள் வந்து சேர்ந்தன.
அப்போது வேலு காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர்களில் ஒருவர், சாமிநாதன் கார் டிரைவரிடம், 'உங்க அமைச்சர் எங்க கார்ல தானே இருக்கார்; மெதுவா வரத் தெரியாது. எதுக்கு இப்படி விரட்டிட்டு வர்ற?' என அவரை திட்டினார்.
இதை கவனித்த பார்வையாளர் ஒருவர், 'அவர் வந்த வேகத்துல இவருக்கு கதி கலங்கிடுச்சு போல... அதான் இப்படி பாயுறாரு...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.