PUBLISHED ON : ஜூன் 10, 2024 12:00 AM

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், 'வீடு கட்டுவதற்கு முன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்து விட்டு, பணியை துவக்க வேண்டும். அதை அமைத்ததுடன் அந்த பக்கமே எட்டிப் பார்க்காமல் இருக்கக் கூடாது.
'எந்த மிஷினாக இருந்தாலும் பராமரிப்பு முக்கியம். 10 வருஷத்துக்கு முன் வீடு கட்டிய போது, மழை நீர் சேகரிப்பு அமைப்பு வைத்திருப்பீர்கள். இப்போதுள்ள டெக்னாலஜிக்கு ஏற்ப அதை, 'அப்டேட்' செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மொபைல் போன் மாத்துறோம்.
'அது மாதிரி நம் வீடு கட்டமைப்புக்கு மழைநீர் சேகரிப்பு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'அதெல்லாம் சரி... இது எல்லாம் அரசு கட்டடங்களில் நடைமுறையில் இருக்கான்னு கலெக்டர் முதலில் பார்க்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.