PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை, கொளத்துாரில் நடந்தது. இதில், கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். அவர் தியானம் செய்தது விவேகானந்தர் மண்டபம். ஆனால், வணங்கியது திருவள்ளுவர் சிலை; அதை அமைத்தவர் கருணாநிதி. தமிழகத்தில் கருணாநிதி செல்லாத இடம் உண்டா, அவர் எழுதாத நுால் உள்ளதா... அவர் கொண்டு வராத திட்டம் ஏதும் உள்ளதா, திறக்காத பள்ளி ஏதும் உள்ளதா?' என, கேள்வி எழுப்பியபடி பேசினார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இப்ப முதல்வரா இருக்கிற நம்ம தலைவர் ஸ்டாலின் எதுவுமே செய்யல'ன்னு சொல்ல வர்றாரா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'அதானே...' என ஆமோதித்து சிரித்தார்.