PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

திருப்பூர் நகைச்சுவை அரங்கம் சார்பில், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 'இன்று ஞாயிற்றுக்கிழமை, 'டிவி' நாடகம் எதுவும் இல்லை என்பதால், பெண்கள் அதிகம் வந்திருக்கிறீர்கள்.
'தினமும் உற்சாகமாக சிரித்து வாழ வேண்டும். கேமராவை பார்த்தாலும், போட்டோ கிராபர்கள் ஸ்மைல் என்று சொன்னால் தான் சிரிக்கிறோம். உறவினர்கள் சந்தித்தால், 'எப்படி இருக்கீங்க?' என்று யாரும் விசாரிப்பதில்லை... 'உங்களுக்கு சுகர் எவ்வளவு இருக்கு?'ன்னு தான் விசாரிச்சிக்கிறாங்க...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'முன்பெல்லாம் எல்லாரும் ஆரோக்கியமா இருந்தாங்க... நலம் விசாரிச்சிக்கிட்டாங்க... இப்ப எல்லாம், 'பிபி, சுகர்' இல்லாத ஆளே இல்லையே... இருக்கிறதை தானே கேட்கணும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.