PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரினர்.
'மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாமே... தி.மு.க., அரசின் மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மை இல்லை என, தணிக்கைத் துறை குற்றம்சாட்டியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் எப்படி சிறையில் உள்ளாரோ, அதேபோல ஸ்டாலினும் சிறை செல்வார்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'பா.ஜ., முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்திருந்தால், இவர் சொல்றது நடந்திருக்கும்... இப்ப நடக்குமான்னு தெரியலையே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.