PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

நாமக்கல் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கு திறப்பு விழாவில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை லோக்சபா தேர்தல் முடிவு காட்டுகிறது. 234 சட்டசபை தொகுதிகளில், மூன்றில் ஒரு பங்கான, 78 தொகுதிகளில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
'எங்கள் முக்கிய குறிக்கோள், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான். அதற்காக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை கட்டமைப்போம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'லோக்சபா, சட்டசபை தேர்தலை தனித்தனியாக பார்க்கும் பக்குவம் உள்ளவர்கள் தமிழக மக்கள்... இவரோட இந்த கணக்கு, சட்டசபை தேர்தலில் ஒர்க் அவுட் ஆகாதே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.