PUBLISHED ON : ஜூன் 07, 2024 12:00 AM

புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டத்தில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 'குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால், அதை பிய்த்துக் கொண்டே தான் இருக்கும். அதுபோல் நம் கெட்ட நேரம் இதுபோன்ற கவர்னர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். திருவள்ளுவர் குறித்து சர்ச்சை பதிவுகளை செய்து வரும் கவர்னரை நாம் என்ன செய்வது?
'ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் கவர்னரை என்ன தான் செய்ய முடியும். வாதத்திற்கு மருந்துண்டு; பிடிவாதத்திற்கு மருந்தில்லை' என்றார்.
இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'இந்த டயலாக் நம்ம கட்சிக்கும் பொருந்தும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, 'மாவட்ட தி.மு.க.,வில் உள்ள கோஷ்டி பூசலை தான் இப்படி சொல்றார்...' என, விளக்கம் சொல்லி புறப்பட்டார்.