Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மே 21, 1991

முன்னாள் பிரதமர் இந்திரா - பெரோஸ் ஜெஹாங்கீர் கண்டி, காந்தியின் மீது கொண்ட மரியாதை காரணமாக தன் பெயரை பெரோஸ் காந்தி என, மாற்றிக் கொண்டார். இவர்களின் மூத்த மகனாக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1944 ஆக., 20ல் பிறந்தவர் ராஜிவ். டில்லி ஷிவ் நிகேதன் பள்ளி, டேராடூனின், 'தி டூன்' பள்ளி மற்றும் சுவிட்சர்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில், உயர்கல்வி படித்தவர், 1966ல் இந்தியா திரும்பினார்.

இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலித்து, 1968ல் மணந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார். பிரதமரான இந்திரா, 1984 அக்., 31ல் சுட்டுக் கொல்லப்பட்டதால், தன், 40 வயதில் நாட்டின் இளம் பிரதமராக ராஜிவ் பதவி ஏற்றார்.

போபால் விஷவாயு, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போன்ற சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்ட திருத்தங்கள் இன்றும் இவரை நினைவுகூர்கின்றன.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், தன் 46வது வயதில் 1991ல் இதே நாளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவரது நினைவு தினம் இன்று!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us