PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

ஆகஸ்ட் 4, 1935
சிவகங்கையில், நாராயண சேர்வை - கோமதி தம்பதியின் மகனாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர் நா.தர்மராஜன். சிவகங்கை மன்னர்துரைசிங்கம் நினைவு கல்லுாரியில் பொருளாதாரத்தில் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும்முடித்தார். அதே கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியரானார்.
இடையில், வெ.சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதி உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்புகளை படித்ததால், சோவியத் ரஷ்யாவின் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார். ஐரிஷ்எழுத்தாளர் சீன் ஓ கேசியின், 'தி ஒர்க்கர் ப்ளோஸ் தபக்ல்' நுாலை, 'உழைப்பாளியின் சங்கநாதம்' என மொழிபெயர்த்தார்.
தொடர்ந்து, சீனக்கதைகள், இத்தாலிய கதைகளை மொழிபெயர்த்தார். பல மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, 'அன்னா கரீனினா, பாரீஸ் கம்யூன், மகாத்மா -சில பார்வைகள், ஐன்ஸ்டீன், கார்ல் மார்க்ஸ்' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நுால்களை மொழிபெயர்த்து, பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றார்.
உலகின் உன்னத கருத்துக்களை தமிழுக்கு தந்த மொழிபெயர்ப்பாளரின் 89வது பிறந்த தினம் இன்று!