
எப்போது யோசிப்பார் ? ஆர்.ஈஸ்வர், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுக்கு ஒரு முறை வருவது தான் பிறந்த நாள்; அதை ஆண்டு முழுதும் எவரும் கொண்டாட மாட்டார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்... கொண்டாடுகின்றனர்... கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்!
லண்டனில் ஒரு பாலம்
உள்ளதாம்... அதன் ஒரு பக்கம் பெயின்ட் பூச துவங்கினால், மறுபக்கம் பூசி
முடிப்பதற்குள் ஓர் ஆண்டு ஆகிவிடுமாம். அதனால், மறுபடியும் துவங்கிய
இடத்திலிருந்து பெயின்ட் பூச துவங்கி விடுவராம். அதாவது, ஆண்டு முழுதும்
அப்பாலத்தில் பெயின்ட் பூச்சு வேலை நடந்து கொண்டே இருக்குமாம்!
மாற்றம் செய்வரா? தேவ்.பாண்டே, செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சியில், சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போதும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, முதல் நாளில் ஏதாவது ஒன்றை செய்வது கருணாநிதி வழக்கம். சட்டசபை நடவடிக்கை களை மக்கள் கூர்ந்து கவனித்து விடக் கூடாது என்பதற்காக செய்யப் படும் அரசியல் தந்திரம் இது!
'தந்தை
எவ்வழியோ, தனயனும் அவ்வழி' என்பது போல், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை
தாக்கல் செய்வதற்கு முதல் நாள், தன் சமூக வலைதளத்தில், 'பட்ஜெட்'
இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீடு, ₹க்கு பதிலாக, 'ரூ' என்ற எழுத்தை
வெளியிட்டார், முதல்வர்.
மறைக்க முடியுமா?
என்.ஏ.நாக
சுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே, விஞ்ஞான ஊழல்,
சர்க்காரியா கமிஷனுக்கு தண்ணீர் காட்டிய கட்சி என்பது அனைவரும் அறிந்த
விஷயம்தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊழல் செய்வதில் எட்டடி
பாய்ந்தால், அவர் மகன் ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்.