
மன்னிப்பு தேவையில்லை!
மு.நெல்லையப்பன்,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: தக் லைப் திரைப்பட இசை நிகழ்ச்சியில்,
'தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்' என்று நடிகர் கமல் கூறவே,
கர்நாடகாவில் தீ பற்றிக் கொண்டது. 'கன்னட மொழியை கமல் அவமானப்படுத்தி
விட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று மாநில முதல்வர் முதல்,
மொழி அரசியல் செய்யும் சிறு கட்சிகள் வரை கொதித்து எழுந்தனர்.
திராவிட முகமூடி!
சு.சங்கரலிங்கம்,
சத்திரப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தமிழகம்,
கேரளா, ஆந்திரா, கர்நாடகா இந்த நான்கு மாநிலங்களும் சேர்ந்தது தான் திராவிட
நாடு. 'நாம் அனைவரும் திராவிடர்' என்று கூறி, 'இது திராவிட மாடல் அரசு'
என்று மார்தட்டுகிறார், தமிழக முதல்வர். ஆனால், திராவிட நாட்டின் ஒரு
பகுதியான கேரளாவின் நீர் வளம், 90 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.
அதில், சிறு பகுதியாவது திராவிட நாட்டின் ஒரு பகுதியான தமிழகத்துக்கு தர
மறுப்பது ஏன்?