/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அ.தி.மு.க., புள்ளியில் கோலம் போடும் தி.மு.க., அ.தி.மு.க., புள்ளியில் கோலம் போடும் தி.மு.க.,
அ.தி.மு.க., புள்ளியில் கோலம் போடும் தி.மு.க.,
அ.தி.மு.க., புள்ளியில் கோலம் போடும் தி.மு.க.,
அ.தி.மு.க., புள்ளியில் கோலம் போடும் தி.மு.க.,
PUBLISHED ON : ஜூன் 07, 2025 12:00 AM

எஸ்.சந்தானம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி' என்று சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், தி.மு.க., வின் நான்காண்டு ஆட்சி, நாடு துாற்றும் ஆட்சியாக உள்ளது என, மக்கள் பேசுகின்றனர். கடந்த 2011ல் மின்வெட்டால், தி.மு.க., ஆட்சி பறிபோனது போல், வரும் 2026ல், சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் இந்த ஆட்சி பறிபோகும் என்பது உறுதி.
'அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில், சட்டம் -- ஒழுங்கு காப்பாற்றப்படும். போதைப் பொருட்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்' என தி.மு.க., அரசை சாடியுள்ளார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
இந்த நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி, 'கான்செப்ட்'க்கே, முந்தைய அ.தி.மு.க., ஆட்சி தான் வழிகாட்டி என்பதை மறந்து விட்டார் உதயகுமார்.
போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தி.மு.க., அரசை குற்றஞ்சாட்ட, அ.தி.மு.க.,வினருக்கு அருகதை இருக்கிறதா என்று, உதயகுமார் தன் மனதை தொட்டு சொல்லட்டும்!
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போதைப் பொருட்கள் பதுக்கல் சோதனை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலர் சேம்பரிலேயே நிகழ்ந்ததை மறந்து விட்டு, தி.மு.க.,வை இன்று குற்றஞ்சாட்டுகிறார்.
நாட்டு நலனின் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், அப்போதே இரும்புக்கரம் கொண்டு தடுத்திருக்க வேண்டியது தானே?
'நுாறாண்டு பேசும் ஓராண்டு ஆட்சி' என்று நாடு முழுதும் போஸ்டர் ஒட்டி துவக்கி வைத்ததும், ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது, 'கான்செப்ட்'களை கண்டுபிடித்து போஸ்டர் ஒட்டி, சுய விளம்பரம் செய்ததும் எவருடைய ஆட்சியில்?
அன்று, அ.தி.மு.க.,வினர் புள்ளி வைத்தனர்; இன்று, தி.மு.க.,வினர் அதில் கோலம் போடுகின்றனர்!
அதைத் கண்டு இப்போது பொருமுவானேன்!
மவுனம் சாதிப்பது ஏன்?
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: நாள்தோறும் பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றில் ஒன்றிரண்டு பெரிதாக பேசப்படுகின்றன; பல குற்றங்கள் அன்றைய
செய்தித்தாளில் இடம் பெற்று அடுத்த நாள் மக்களால் மறக்கப்படுகின்றன.
அண்ணா
பல்கலை மாணவி பலாத்கார வழக்கை, அரசியல் ஆதாயம் கருதி, 157 நாட்களில்
முடித்து வைத்துள்ள தமிழக அரசு, ஏதோ பெரிய போரில் வெற்றி அடைந்ததைப் போல்
கொண்டாடுவது வெட்கக்கேடு!
தி.மு.க.,வின் ஆஸ்தான கவிஞரான வைரமுத்துவை விட்டு கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்கு வாழ்த்து கூட பாடுவர் போலிருக்கு!
ஞானசேகரன்
தண்டனை பெற்றுள்ளான். இதில் தமிழக அரசு பெருமைப்பட என்ன உள்ளது? பொழுது
விடிந்து பொழுது போனால் கொலை - கொள்ளை தான் தமிழகத்தில்!
அதுகுறித்து என்றாவது கவலை கொண்டுள்ளதா?
இதோ,
கோவில்பட்டியில் ஆறு கொலைகள் நடந்தேறியுள்ளன. இதுபோன்ற குற்றங்கள்
நிகழாமல் மக்களை காக்க வேண்டிய அரசு, நடந்த கொலைக்கு தண்டனை பெற்று தந்ததை
கொண்டாடி மகிழ்வது மகா கேவலம்.
மேலும், இந்த வழக்கோடு பேசப்பட்ட
அந்த, 'சார் யார்?' என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதுகுறித்து
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பல சார்களின் பெயர்களை
குறிப்பிட்டு, இப்போதும் கேட்கிறார், 'யார் அந்த சார்?' என்று...
எதிர்க்கட்சியினர்
விடாக்கொண்டனாய், 'யார் அந்த சார்?' என்று கேட்டுக்கொண்டே இருந்தாலும்,
கொடாக்கண்டனாய் ஸ்டாலின் மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்?
அன்றே பாடினாரய்யா பட்டுக்கோட்டையார்!
எஸ்.லட்சுமி
திலகன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எதிர்காலத்தில்
நடக்கப் போவதை, முன்கூட்டியே அறிந்து சொல்பவர்கள் பலர், முற்காலத்தில்
இருந்தனர். தற்போது, அத்தகைய ஆற்றல் பெற்றவர், ஒரே ஒருவர் தான் இருந்தார்;
அவரும் பாவம், அற்ப ஆயுளிலேயே மறைந்து விட்டார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற கவிஞன் தான், அந்த தீர்க்கதரிசி.
'திருடானாகப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்றார் அவர்!
நம்
நாட்டில், திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி, ஊழல்,
லஞ்சம், கருப்பு பணம் போன்ற அனைத்து குற்ற சம்பவங்களையும், முறைகேடுகளையும்
தடுக்க அருமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அதை செயல்படுத்த வேண்டியவர்கள்,
கண்ணில் துணி கட்டித் திரிகின்றனர்.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக உணவு பாதுகாப்பு துறை சேர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட, 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அந்த வழிகாட்டு
நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ, கடைகளின்
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கடையின் உரிமம் ரத்து
செய்யப்படுமாம்... வேடிக்கையாகத் தான் உள்ளது.
நாட்டில் எங்கும்
அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும்
அகற்றப்பட்டு விட்டனவா?
உயிர்பலிகளுக்கு மூலக் காரணமாக இருக்கும்
பேனர் கலாசாரம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூட ஒரு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு பின்னர் உயிர் பலி வாங்கும்
பேனர்களின் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளதேயன்றி, குறைந்தபாடில்லை
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரிலேயே பிளாட்பார கடைகள் வைக்கக் கூடாது
என்ற உத்தரவு சென்னை பெரு நகர மாநகராட்சியால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவு எழுதி வைக்கப்பட்ட போர்டுக்கு கீழேயே, பிளாட்பார கடைகள்
அமைக்கப்பட்டுள்ளன
காற்று வாங்குவதற்கும், அலைகளில் நின்று
மகிழ்வதற்குமான மெரினா கடற்கரையில், 60 ஆண்டு களுக்கு முன்பு வரை, 10
அல்லது 20 பேர், தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல், முறுக்கு என, தகர
டப்பாவில் எடுத்து வந்து விற்றுக் கொண்டிருந்தனர்.
தற்போது அந்த
கடற்கரையே வியாபார கேந்திரமாகி விட்டதோடு, அந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய
மாநகராட்சியோ, உரிமம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கிறது.
அரசு
நிர்வாகத்திற்கும், நீதிமன்ற உத்தரவுகளுக்கும் கொஞ்சமும் மதிப்பும்
மரியாதையும் இல்லாத நிலையில், தற்போது உணவு பாதுகாப்பு துறை போட்டுள்ள
உத்தரவுகளை மட்டும் பின்பற்றி விடுவரா என்ன?
போக்குவரத்து விதிகளை
மீறும் வாகன ஓட்டி களிடம், காவல் துறையினர் கையூட்டு பெற்றுக் கொண்டு,
அனுமதிப்பது மாதிரி, உணவு பாதுகாப்பு துறையினரும் சோதனை நடத்தி தங்கள்
பாக்கெட்டுகளை நிரப்பி கொள்ளவே இந்த உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகள்
வழிவகுக்குமேயன்றி, பிரச்னைக்கு தீர்வாகாது.
பட்டுக்கோட்டையார் பாட்டு சரிதானே!