நடுநிலை ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்கும்!
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று, அ.தி.மு.க., பொதுக் குழுவில் மீண்டும் திட்டவட்டமாக பழனிசாமி அறிவித்து விட்டார். நடக்க இருப்பது லோக்சபா தேர்தல். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டுமா, கூடாதா என்பதை முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டியிடுகின்றன.
பாகிஸ்தானுக்கே போய் விடுங்கள் பரூக்!
எஸ்.மணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'நவாஸ் ஷெரீப்,
பாகிஸ்தான் பிரதமராக போகிறார். நம்முடன் பேச்சுக்கு தயார் என கூறி
வருகிறார். பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி தீர்வு காணா விட்டால், காசாவில்
தினமும் குண்டு வீச்சுக்கு ஆளாகும் பாலஸ்தீனியர்களின் நிலை தான் நமக்கும்
ஏற்படும்' என்று ஒரு வெடிகுண்டை வீசி, ஆழம் பார்த்து இருக்கிறார், ஜம்மு -
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா.