/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள்கள் வழங்கும் தலைமை ஆசிரியர்அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள்கள் வழங்கும் தலைமை ஆசிரியர்
அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள்கள் வழங்கும் தலைமை ஆசிரியர்
அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள்கள் வழங்கும் தலைமை ஆசிரியர்
அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள்கள் வழங்கும் தலைமை ஆசிரியர்
ADDED : ஜூலை 04, 2024 03:38 PM

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தன் சொந்த செலவில் சைக்கிள்களை அப்பள்ளி தலைமையாசிரியர் வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பண்டசீமனூர் கூட் ரோடு அருகே குண்டலானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த, 1986ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, 38 ஆண்டுகளை கடந்துள்ளது. இங்கு, குண்டலானூர், ஈஸ்வர தாசரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் பயின்று வந்தனர். தனியார் பள்ளி மோகத்தால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்தது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இரு ஆசிரியர்களை கொண்டு இயங்கி வந்த இப்பள்ளி தற்போது ஓராசிரியர் பள்ளியாக மாறியுள்ளது. இருப்பினும் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தற்போது தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் வெங்கடாபதி மாணவர்களுக்கு தன் சொந்த செலவில், சிறுவர்களுக்கான சைக்கிள் வாங்கி கொடுத்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த, 10 ஆண்டுகளாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்போது ஓராசிரியர் பள்ளியாக செயல்படும் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு, பாடங்களையும் நானே எடுத்து வருகிறேன். நடப்பாண்டில் பள்ளியில், 6 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதை அதிகப்படுத்துவதற்காக, ரூ.6,500 மதிப்புள்ள சிறுவர்கள் ஓட்டும் சைக்கிள்களை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். கடந்தாண்டில், 4 மாணவர்களுக்கும் நடப்பாண்டில் மூன்று மாணவர்களுக்கும் சைக்கிள்கள் வழங்கியுள்ளேன். அரசுப்பள்ளியின் சலுகைகள், சிறப்பான கல்வியை கொடுக்கவும் முயன்று வருகிறேன். மாணவர்களின் பெற்றோரும் இதை உணர்ந்து அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்,” என்றார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் நாங்களும் எங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வமாக உள்ளோம். அதற்கு பள்ளிக்கு சுற்றுச்சுவர், பேவர் பிளாக் நடைபாதை உள்ளிட்டவற்றை அரசு செய்து கொடுத்தால் மட்டும் போதும். அதை செய்தாலே இப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.