Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவு பார்சலில் செத்த பாம்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவு பார்சலில் செத்த பாம்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவு பார்சலில் செத்த பாம்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவு பார்சலில் செத்த பாம்பு

UPDATED : ஜூலை 05, 2024 10:29 AMADDED : ஜூலை 05, 2024 12:53 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மஹாராஷ்டிராவில் மதிய உணவு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலம் ஒன்றில் சிறிய பாம்பு இறந்து கிடந்தது.

மஹாராஷ்டிர மாநிலம், சாங்கிலி மாவட்டம் பாலுஸ் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, தினமும் குழந்தைகளின் பெற்றோரை வரவழைத்து, குழந்தைகளுக்கான மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். கடந்த 1ம் தேதி குழந்தைக்காக பெற்றோரிடம் வழங்கப்பட்ட மதிய உணவு பொட்டலத்தில் சிறிய பாம்பு இறந்து கிடந்துள்ளது.

உணவு பொட்டலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று குழந்தைக்கு ஊட்டுவதற்காக, அவரின் தாய் பிரித்து பார்த்த போது பாம்பை கவனித்துள்ளார். உடனடியாக அந்த பொட்டலத்தை பாம்புடன் புகைப்படம் எடுத்து அங்கன்வாடி ஊழியருக்கு அனுப்பி வைத்தார். அதை அங்கன்வாடி ஊழியர் அவர்களுக்கான மாவட்ட அளவிலான வாட்ஸாப் குழுவில் பகிர்ந்ததும், இந்த செய்தி வெளியே தெரிந்தது.

இது குறித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆனந்தி போஸ்லே கூறுகையில், “அங்கன்வாடிகளில் ஆறு மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கும், கர்ப்பிணியருக்கும் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

''கடந்த 1ம் தேதி பருப்பு கிச்சடி பொட்டலம் வழங்கப்பட்டது. அதை பெற்ற குழந்தையின் பெற்றோர், அதில் இறந்த பாம்பு கிடந்ததாக கூறினர்.

“இது குறித்து, மாவட்ட அங்கன்வாடி துறை தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்கப்படும் கிடங்குக்கு 'சீல்' வைக்கப்பட்டது. உணவு வினியோக ஒப்பந்ததாரரே இதற்கு பொறுப்பு,” என்றார்.

மாவட்ட அங்கன்வாடி துறை தலைவர் சந்தீப் யாதவ் கூறியதாவது: அங்கன்வாடிகளுக்கு உணவு பொட்டலங்கள் நேரடியாக ஒப்பந்ததாரர் வாயிலாக வழங்கப்படுகின்றன. பின்னர் அங்கன்வாடிகளுக்கு குழந்தைகளின் பெற்றோரை வரவழைத்து உணவு பொட்டலங்கள் தரப்படுகின்றன. பாம்பு கிடந்ததாகக் கூறிய உணவு பொட்டலத்தை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது மஹாராஷ்டிராவில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பாலுஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., இந்த பிரச்னையை சட்டசபையில் எழுப்பினார்.

“குழந்தைகள், கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் உணவில் பாம்பு கிடப்பது மிகவும் மோசமான விஷயம். இதனால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியரின் உயிருக்கே ஆபத்து. அரசு இதை புரிந்து கொண்டு, அலட்சியமாகச் செயல்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us