/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஐவருக்கு வாழ்வு தந்த 11 வயது சிறுவன்; மகனை இழந்த நிலையிலும் நெகிழச் செய்த பெற்றோர் ஐவருக்கு வாழ்வு தந்த 11 வயது சிறுவன்; மகனை இழந்த நிலையிலும் நெகிழச் செய்த பெற்றோர்
ஐவருக்கு வாழ்வு தந்த 11 வயது சிறுவன்; மகனை இழந்த நிலையிலும் நெகிழச் செய்த பெற்றோர்
ஐவருக்கு வாழ்வு தந்த 11 வயது சிறுவன்; மகனை இழந்த நிலையிலும் நெகிழச் செய்த பெற்றோர்
ஐவருக்கு வாழ்வு தந்த 11 வயது சிறுவன்; மகனை இழந்த நிலையிலும் நெகிழச் செய்த பெற்றோர்

மதுரை: அருப்புக்கோட்டை அருகே உறவினருடன் டூவீலரில் சென்று விபத்தில் சிக்கிய சிறுவன் சபரீசன், 11 மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஐந்து நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை சிதம்பராபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் சரவணன், அரசுப்பள்ளி எழுத்தர். இவரது மகன் சபரீசன் 11. விடுமுறைக்காக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரத்தில் உள்ள சரவணனின் உறவினரும் ராணுவ வீரருமான அருண்குமார் 36 வீட்டுக்குச் சென்றுள்ளார். மே 14 மதியம் 1:30 மணிக்கு அருண்குமார் டூவீலரில் மனைவி கார்த்திகா 35, மகள் பவதாரிணி 8, சபரீசனுடன் அருப்புக்கோட்டை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சாயல்குடி ரோட்டில் கல்லுாரணி அருகே வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த தனியார் பஸ் உரசியதில் நால்வரும் துாக்கி வீசப்பட்டனர். கார்த்திகா, பவதாரிணி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அருண்குமார், சபரீசன் மதுரை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
நேற்று (மே 16) காலை 6:41 மணிக்கு சிறுவன் சபரீசன் மூளைச்சாவு அடைந்தார். 11 வயது மகனை இழந்த துக்கத்தில் தவித்த சரவணன், அவனது உடல் உறுப்புகளை தானமாக தரமுன்வந்தார். சிறுவனின் கல்லீரல் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி நோயாளிக்கும் ஒரு சிறுநீரகம், இரு கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரை அப்போலோ மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. அரசு மரியாதையுடன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டீன் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில் ''இந்தாண்டின் 5வது உறுப்பு தானம் இது. முதன்முறையாக 11 வயது சிறுவனிடம் இருந்து உறுப்புகள் தானம் எடுத்து ஐந்து பேருக்கு வாழ்வளிக்கப்பட்டது'' என்றார்.
கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் ஆகியோர் சிறுவனின் தந்தை சரவணனிடம் உறுப்பு தானத்திற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.