UPDATED : மே 18, 2025 02:15 PM
ADDED : மே 18, 2025 04:44 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ், 35; பெங்களூரு ஐ.டி., ஊழியர். இவரது மனைவி அபர்ணா, 34. இவர்களின், 6 வயது மகள் லலித் ரேணு. ஒன்றாம் வகுப்பு மாணவி.
மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ள ஸ்ரீதர், மனைவி, குழந்தையையும் உடன் அழைத்து செல்வார். லலித் ரேணு, ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம், ஆந்திராவில் உள்ள, 30க்கும் மேற்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களை ஏறியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, லலித் ரேணு பயிற்சி பெற்றார். இதில், தந்தை, தாயும் பயிற்சி எடுத்தனர்.
மே, 5ல் லலித் ரேணு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் துவக்கினார். அபர்ணாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், ஸ்ரீதரும், லலித் ரேணுவும் தொடர்ந்து மலை ஏறி, மே, 14ல், 18,000 அடி உயரமுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தனர்.
ஆறு வயதிற்குட்பட்ட சிறுமி என்ற அளவில் தமிழகத்தைச் சேர்ந்த லலித் ரேணு தான் முதல் முதலாக எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.