/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/மாணவர்களுக்கு வங்கி துவங்கிய அரசு பள்ளி சேமிப்பு பழக்கத்தை கற்று தந்து முன்னுதாரணம்மாணவர்களுக்கு வங்கி துவங்கிய அரசு பள்ளி சேமிப்பு பழக்கத்தை கற்று தந்து முன்னுதாரணம்
மாணவர்களுக்கு வங்கி துவங்கிய அரசு பள்ளி சேமிப்பு பழக்கத்தை கற்று தந்து முன்னுதாரணம்
மாணவர்களுக்கு வங்கி துவங்கிய அரசு பள்ளி சேமிப்பு பழக்கத்தை கற்று தந்து முன்னுதாரணம்
மாணவர்களுக்கு வங்கி துவங்கிய அரசு பள்ளி சேமிப்பு பழக்கத்தை கற்று தந்து முன்னுதாரணம்

முன்னுதாரணம்
இதற்கு விதிவிலக்காக, சில அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் சிக்கமகளூரின் பள்ளி ஒன்று, மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்று தருகிறது. குறிப்பாக சிறு வயதில் இருந்தே, சேமிப்பு பழக்கத்தை கற்று தருகிறது.
'ட்ரூ ஸ்கூல் பேங்க்'
இதுவரை 3,000 ரூபாய் டிபாசிட் வசூலாகியுள்ளது. யாராவது பணம் கட்டினால் பாஸ்புக்கில் பதிவு செய்யப்படுகிறது. வங்கிக்கு 'ட்ரூ ஸ்கூல் பேங்க்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. தினமும் காலை 9:00 மணி முதல் வங்கியில் பணம் டிபாசிட் செய்யலாம். வங்கி மேனேஜர், கேஷியர் என, யாரையும் பள்ளி நிர்வாகம் நியமிக்கவில்லை. தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஷிரவண், மேனேஜராகவும், துருவன் கேஷியராகவும் செயல்படுகின்றனர்.
குறைந்த விலை
மற்றொரு புதுமையையும், கூதுவள்ளி அரசு தொடக்க பள்ளி செய்துள்ளது. பள்ளியில் 'ட்ரூ ஷாப்' என்ற பெயரில், கடை திறந்துள்ளனர். இந்த கடையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், புத்தகம், ரப்பர், ஷார்ப்னர் உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். இவைகள் தனித்தனி டப்பாவில் வைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் மாணவர்கள் வாங்கலாம்.