/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மேற்கு வங்க ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோ மேற்கு வங்க ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோ
மேற்கு வங்க ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோ
மேற்கு வங்க ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோ
மேற்கு வங்க ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோ
ADDED : ஜூலை 28, 2024 01:27 AM

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், ஹோட்டல் ஒன்றில் உணவு பரிமாறும் சேவையில், 'ரோபோ'க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணா நகர் அருகே, 'மதர் ஹட்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு பரிமாறும் சேவையில், நான்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
'அனன்யா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், வெள்ளை நிறத்தில் உள்ளன. 5 அடி உயரம் மற்றும் செவ்வக முகம் கொண்ட இந்த ரோபோக்கள், 'சென்சார்' வாயிலாக இயக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவை மேஜைக்கு அருகில் எடுத்துச் சென்று ரோபோக்கள் வழங்கி வருகின்றன. உணவு எடுத்துச் செல்லும் போது, யாராவது குறுக்கே வந்தால், 'தயவு செய்து எனக்கு வழி விடுங்கள்; வழியில் நிற்க வேண்டாம்; என்னை சேவை செய்ய அனுமதிக்கவும்' என, ரோபோக்கள் கூறுகின்றன.
இது குறித்து, உணவக மேலாளர் சுபாங்கர் மொண்டல் கூறியதாவது:
எங்கள் உணவகம் முழுக்க முழுக்க அக்கம்பக்கத்தைச் சேர்ந்த பெண்களால் நடத்தப்படுகிறது. உணவகத்தின் அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் கவனித்துக் கொள்கின்றனர்.
அதனால் தான், ரோபோக்களுக்கு, 'அனன்யா' என, பெயரிட்டோம். பராசத், பாரக்பூர், கல்யாணி, ரனாகாட், பெர்ஹாம்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் மக்கள் அதிகம் வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.