/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மாரடைப்பால் மயங்கிய டிரைவர்; பஸ்சை ஓட்டிய உள்ளூர் வாசி மாரடைப்பால் மயங்கிய டிரைவர்; பஸ்சை ஓட்டிய உள்ளூர் வாசி
மாரடைப்பால் மயங்கிய டிரைவர்; பஸ்சை ஓட்டிய உள்ளூர் வாசி
மாரடைப்பால் மயங்கிய டிரைவர்; பஸ்சை ஓட்டிய உள்ளூர் வாசி
மாரடைப்பால் மயங்கிய டிரைவர்; பஸ்சை ஓட்டிய உள்ளூர் வாசி
ADDED : மே 27, 2025 04:31 AM

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அரசு பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். உள்ளூர்வாசியான சண்முகநாதன் பஸ்சை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஓட்டிச்சென்று உடனடி சிகிச்சைக்கு உதவினார்.
தேனி மாவட்டம் போடியில் இருந்து நேற்று காலை அரசு விரைவு பஸ் திருச்சிக்கு 40 பயணிகளுடன் சென்றது. பஸ்சை பண்ணைப்புரம் விஜயன் 47 ஓட்டினார். கண்டக்டராக ராஜேஷ் இருந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் வந்த போது டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார். அப்பகுதியில் நடைபயிற்சி சென்ற அதே ஊரை சேர்ந்த, லாரி உரிமையாளரான ஆர். சண்முகநாதன் 50, கண்டக்டரிடம் அனுமதி பெற்று மயங்கிய டிரைவருடன் பஸ்சை வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஓட்டிச்சென்றார். அங்கிருந்த செவிலியர்கள் மாரடைப்புக்கான 'லோடிங் டோஸ்' தந்து முதலுதவி செய்தனர்.
இதனிடையே 108 ஆம்புலன்சும் அங்கு வந்து சேர திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் டிரைவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார். சண்முகநாதனை அப்பகுதியினர் பாராட்டினர்.