/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/உதயநிதி விழாவில் 'பிக்பாக்கெட்'; வக்கீலிடம் ரூ.50,000 'அபேஸ்'உதயநிதி விழாவில் 'பிக்பாக்கெட்'; வக்கீலிடம் ரூ.50,000 'அபேஸ்'
உதயநிதி விழாவில் 'பிக்பாக்கெட்'; வக்கீலிடம் ரூ.50,000 'அபேஸ்'
உதயநிதி விழாவில் 'பிக்பாக்கெட்'; வக்கீலிடம் ரூ.50,000 'அபேஸ்'
உதயநிதி விழாவில் 'பிக்பாக்கெட்'; வக்கீலிடம் ரூ.50,000 'அபேஸ்'
UPDATED : மே 26, 2025 07:12 AM
ADDED : மே 26, 2025 02:40 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார். புதுக்கோட்டை நகரில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில், தன் மனைவியுடன் பங்கேற்ற தி.மு.க., வழக்கறிஞர் ஒருவர், உதயநிதியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். தன் மனைவியிடம் மொபைல் போனை கொடுத்து போட்டோ எடுக்குமாறு கூறிவிட்டு மேடைக்கு சென்றார்.
போட்டோ எடுத்து விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கியபோது, பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 50,000 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது தெரிந்து அவர் அதிர்ச்சிஅடைந்தார். டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.