/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ வண்ண ஓவியங்களால் அழகான வகுப்பறை குழந்தை நேய பள்ளியாக மாற்றம் வண்ண ஓவியங்களால் அழகான வகுப்பறை குழந்தை நேய பள்ளியாக மாற்றம்
வண்ண ஓவியங்களால் அழகான வகுப்பறை குழந்தை நேய பள்ளியாக மாற்றம்
வண்ண ஓவியங்களால் அழகான வகுப்பறை குழந்தை நேய பள்ளியாக மாற்றம்
வண்ண ஓவியங்களால் அழகான வகுப்பறை குழந்தை நேய பள்ளியாக மாற்றம்
UPDATED : ஜூலை 20, 2024 02:27 AM
ADDED : ஜூலை 20, 2024 01:42 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆறு பள்ளிகளில் புதிய வகுப்பறைகளை 'காணொலி' வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கல்வியை ஆர்வமாக கற்க வைக்கும் வகையில் வகுப்பறைகளை மாற்றம் செய்து, குழந்தை நேய பள்ளிகளாக மாற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறு பள்ளிகளில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆறு பள்ளி வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'காணொலி' வாயிலாக திறந்து வைத்தார்.
ஏரிப்பட்டி, வெள்ளாளபாளையம், சின்ன நெகமம், கள்ளிப்பட்டி, திப்பம்பட்டி, கொள்ளுப்பாளையம் ஆகிய ஆறு பள்ளிகளில், ஒரு கட்டடத்தில் செயல்படும், இரண்டு வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன. விழாவில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பது முதல் படி என்றால், அவர்கள் கற்பதில் நாட்டத்தை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் மாணவர்களின் மனதில் பயத்தை நீக்கி, வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைக்கும் வகையில் வகுப்பறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு, குழந்தைகள் நேய பள்ளி என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
வகுப்பறை என்றால், வெறும் நான்கு சுவர்கள் இருக்கும் என்பதற்கு மாற்றாக, வகுப்பறை சுவர்கள் முழுவதும், ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டன. அதில், உயிர், மெய் மற்றும் ஆயுத எழுத்துக்கள், பழங்கள், மலரின் வகைகள், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், பறவைகள் என வண்ணமயமான ஓவியங்களை வரைந்து வகுப்பறைக்குள் மாணவர்களை அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், வெறும் ஓவியங்களாக மட்டுமின்றி மாணவர்கள் கல்விக்கான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். மாணவர்கள் வகுப்பறைக்கும் வரும் போதே அவர்கள் அங்குள்ள ஓவியங்களோடு அதன் கீழே எழுதப்பட்டுள்ள பெயர்கள், ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களை படித்து மனதில் எளிதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்.
வகுப்பறை நல்ல வண்ணமயமாக இருப்பதால், படிப்பதிலும் ஆர்வம் ஏற்படும். இதற்கான முயற்சியாகத்தான், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.