/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஆசியா போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீராங்கனை மெர்லின்: 18 தங்க பதக்கங்களை குவித்து சாதனைஆசியா போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீராங்கனை மெர்லின்: 18 தங்க பதக்கங்களை குவித்து சாதனை
ஆசியா போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீராங்கனை மெர்லின்: 18 தங்க பதக்கங்களை குவித்து சாதனை
ஆசியா போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீராங்கனை மெர்லின்: 18 தங்க பதக்கங்களை குவித்து சாதனை
ஆசியா போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீராங்கனை மெர்லின்: 18 தங்க பதக்கங்களை குவித்து சாதனை
UPDATED : ஜூலை 18, 2024 10:58 AM
ADDED : ஜூலை 18, 2024 08:31 AM

புதுச்சேரி : ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்ததுடன், அடுத்தாண்டு நடக்கும் உலக அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பாரதிதாசன் கல்லுாரி மாணவி தயாராகி வருகிறார்.
ஸ்கேட்டிங் இன்லைன் ப்ரி ஸ்டைல் ஸ்பீட் ஸ்லாலம் பிரிவில் சீனாவில் நடந்த ஆசியா விளையாட்டு போட்டியில், இந்திய அணியில் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்திருப்பவர் லாஸ்பேட்டை, சாந்தி நகர், அக்பர் வீதியில் வசிக்கும் கல்லுாரி மாணவி மெர்லின் தனம் அற்புதம்.
இவரது தந்தை அற்புதம் சார்லஸ் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்ஸ்டக்டராக பணியாற்றுகிறார். தாய் திவ்யா வீட்டை கவனித்து கொள்கிறார். ஸ்கேட்டிங் விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 8 வயதில் ஸ்கேட்டிங் கற்று கொள்ள பயிற்சியை துவக்கினார் மெர்லின். துவக்கத்தில் மெர்லினுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி சரிவராது என கோச் தெரிவித்தார். இதையே வைராக்கியமாக கொண்டு அவரது தாய், மெர்லினை தினசரி 2 வேளை பயிற்சிக்கு அழைத்து சென்று வந்தார். 10 வயதில் முதல் போட்டியில் பங்கேற்றார். அதன்பின்பு மெர்லினுக்கு ஏறுமுகம் துவங்கியது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மெர்லின், கடந்த 2017 ம் ஆண்டு முதல் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க துவங்கினார். அகமதாபாத், குஜராத் உள்ளிட்ட 8 தேசிய போட்டிகளில் பங்கேற்று, 4 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இது தவிர விசாகப்பட்டினத்தில் நடந்த பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டியில் பங்கேற்று, தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று 14 தங்க பதக்கம் வென்றுள்ளார். நான்கு ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும், ஆசியா விளையாட்டு போட்டி கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சூவில் நடந்தது. இதில், இந்திய வீரராக மெர்லின் பங்கேற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார். மெர்லின், படிப்பிலும் சுட்டி. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 560 மதிப்பெண்கள் எடுத்து, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், தற்போது பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
மெர்லின் தனம் அற்புதம் கூறுகையில்;
ஸ்கேட்டிங் பயிற்சியை கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்க்கும். எனது தந்தை தான் எனக்கு பயிற்சியாளர். சிறு வயதில் 4 மணி நேரம் பயிற்சி தற்போது தினசரி 8 மணி நேரமாக உயர்ந்துள்ளது. உலக அளவிலான போட்டியில் பங்கேற்க தாய்லாந்து, தைவான் நாட்டிற்கு சென்று பயிற்சியில் பங்கேற்றேன். ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அரசு ரூ.3 லட்சம் நிதி உதவி கொடுத்து ஊக்கப்படுத்தியது.
தேசிய அளவிலான பதக்கம் மூலம் மருத்துவம் படிக்க, அரசு வேலை வாய்ப்பு பெறலாம். ஸ்கேட்டிங் எனது வாழ்க்கை என மாறிவிட்டதால், நீட் பக்கம் செல்லவில்லை. அடுத்தாண்டு நடக்கும் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், 2026ம் ஆண்டு நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்ல தற்போது தயாராகி வருகிறேன் என கூறினார்.