/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிதாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி


வறட்சி
மழை பொய்த்து போனதால், பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றில் நீர் இல்லை. மற்றொரு புறம், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதன் விளைவாக நகரில், 6,900 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால், பிப்ரவரியில் பெங்களூரில் மெல்ல தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே வேளையில் வெயிலும் வாட்டி வதைத்தது. 'குளு குளு பெங்களூருவா இது' என்று மக்கள் ஏங்க துவங்கினர்.
தட்டுப்பாடு
ஏன், முதல்வர் அதிகாரப்பூர்வ பங்களாவான கிருஷ்ணா இல்லத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு டேங்கரில் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்னை தீர்க்கும்படி மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். அரசை திட்டித் தீர்த்தனர். 5 ரூபாய் சுத்தமான குடிநீர் மையங்களில், கேன்களுடன் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.

போர்க்கால நடவடிக்கை
ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவத்தை கொண்டு, ஐந்து அம்சங்கள் கொண்ட திட்டத்தை உருவாக்கினார். அதை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். அதில் வெற்றியும் கண்டு, மக்களின் நன்மதிப்பையும், ஆட்சியாளர்களிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
அபராதம் விதிப்பு
மேலும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான டேங்கர்கள் மட்டுமின்றி, மாநகராட்சி, தனியார் டேங்கர்கள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. வழக்கமாக, 10,000 லிட்டர் கொண்ட டேங்கர் நீர், 750 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், பிரச்னையின்போது, 2,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. அத்தகையோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
