/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 12 நாட்களில் 1,000 கி.மீ., ஓடி சிங்கப்பூர் வீராங்கனை சாதனை 12 நாட்களில் 1,000 கி.மீ., ஓடி சிங்கப்பூர் வீராங்கனை சாதனை
12 நாட்களில் 1,000 கி.மீ., ஓடி சிங்கப்பூர் வீராங்கனை சாதனை
12 நாட்களில் 1,000 கி.மீ., ஓடி சிங்கப்பூர் வீராங்கனை சாதனை
12 நாட்களில் 1,000 கி.மீ., ஓடி சிங்கப்பூர் வீராங்கனை சாதனை
ADDED : ஜூன் 17, 2024 01:12 AM

சிங்கப்பூர்:பெண்கள் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும் வகையில் 52 வயதான தடகள வீராங்கனை ஒருவர், தாய்லாந்து முதல் சிங்கப்பூர் வரை உள்ள 1,000 கி.மீ., தொலைவை 12 நாட்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்துஉள்ளார்.
நடவடிக்கை
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவர் நடாலி டவ், 52. தடகள வீராங்கனையான இவர், தற்போது சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடாலி, விளையாட்டின் வாயிலாக பெண்களின் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் கின்னஸ் சாதனை முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.
இதன்படி, தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வரை உள்ள 1,000 கி.மீ., தொலைவை, 12 நாட்களில் தன் ஓட்டத்தின் வாயிலாக கடந்தார். கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி இம்மாதம் 5ம் தேதி நிறைவு செய்தார்.
சரியான திட்டமிடலுடன், உரிய பாதுகாப்பு நடவடிக்கையின் வாயிலாக இச்சாதனையை அவர் சாத்தியமாக்கி உள்ளதாக அவரது நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயணத்தின்போது சராசரியாக 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவான நிலையிலும், தன் ஓட்டத்தை நிறுத்தாமல் நடாலி தொடர்ந்தார். இதன் காரணமாக, அவர் அணிந்திருந்த ஷூக்களும் உருகியதாக தெரிவித்துஉள்ளார்.
நாளொன்றுக்கு 84 கி.மீ., தொலைவு கடந்து சென்ற நடாலிக்கு, இப்பயணத்தின் முதல் நாளிலேயே இடுப்பில் காயம் ஏற்பட்டது.
அங்கீகாரம்
எனினும், இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் ஓட்டத்தை அவர் தொடர்ந்தார். இவரது சாதனையை, கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து உள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் நோக்கில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ஜிஆர்எல்எஸ்' என்ற அமைப்பு சார்பில் இந்த ஓட்டத்தின் வாயிலாக 41.78 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.