Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'யு - டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டில், கழிவுகளை வீசியவர்கள் யாரிடமாவது காங்கிரஸ் உறுப்பினர் கார்டு இருக்கிறதா? இருந்தால் கொடுக்க சொல்லுங்கள். சென்னை மாநகராட்சியில், நான் ஏதாவது ஒரு கான்ட்ராக்ட் எடுத்திருந்தால், அதையும் நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள்; வழக்கு போடுங்கள்.

டவுட் தனபாலு: 'சவுக்கு' சங்கர் வீட்டுல ரகளை நடத்த போனவங்க, உங்க கட்சி உறுப்பினர் கார்டை கழுத்துல தொங்க விட்டுட்டா போயிருப்பாங்க... அது இருக்கட்டும்... மாநில அளவுல கான்ட்ராக்ட் எடுக்கும் தகுதியுள்ள உங்களை போய், மாநகராட்சியில் கான்ட்ராக்ட் எடுத்திருக்கார்னு சிறுமைப்படுத்தியது முறையா என்ற, 'டவுட்' வருதே!



என்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: நம் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க, மத்திய அரசின் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. இதனால்தான், 'மாநில அந்தஸ்து அவசியம்' எனக் கேட்டு வருகிறோம். மாநில அந்தஸ்து பெறாவிட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில்தான் இருக்கும்; இதில் சந்தேகம் இல்லை.

டவுட் தனபாலு: புதுச்சேரியில், நாலு வருஷமா நீங்கதான் முதல்வரா இருக்கீங்க... மாநிலம் முன்னேறியிருந்தால் மட்டும், 'என்னால தான்'னு மார்தட்டியிருப்பீங்க... பின்தங்கி இருப்பதால் தான், மாநில அந்தஸ்து மீது பழிபோடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



அ.தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் வெள்ளம் போல் ஆறாக ஓடுகிறது; இதனால், மக்கள் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரங்களை கவனிக்க வேண்டும். தமிழகத்தை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் ஊழலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அரசு நிதி, வேறு திசைகளுக்கு திருப்பப்படுகிறது. அதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: ராஜ்யசபாவுல நீங்க இப்படி பேசிய அன்று இரவே, அமித் ஷா, 'தமிழகத்தில் 2026ல் மது வெள்ளமும்; ஊழல் புயலும் முடிவுக்கு வரும்'னு சமூக வலைதளத்துல பதிவிட்டாரே... அவர் எழுதித் தந்ததை நீங்க பேசினீங்களா அல்லது நீங்க பேசியதை அவர் பதிவிட்டாரா என்ற, 'டவுட்'தான் வருது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us