Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகியவற்றிலும், எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர். இதற்கு வசதியாக பொது சின்னம் தேவைப்படுகிறது. எங்களது பானை சின்னத்தையே பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.

டவுட் தனபாலு: தமிழகத்தின்மிகப் பெரிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., கூட எடுக்காத அதிரடி முடிவை எடுத்திருக்கீங்களே... நிஜமாகவே, இந்த மாநிலங்கள்ல எல்லாம் போட்டியிட போறீங்களா அல்லது தேர்தல் கமிஷனை ஏமாற்றி, பொது சின்னத்தை வாங்க இப்படி, 'அடிச்சு' விடுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!





சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ்: இலவச பயண திட்டத்தால், பெண்கள் மாதம், 900 ரூபாய் வரை சேமித்து வருகின்றனர். இந்த திட்டம் துவங்கியது முதல் இதுவரை, 424 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து கழகங்களுக்கு 6,788 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கி உள்ளது.

டவுட் தனபாலு: அரசு தரப்பில் இருந்து, இத்தனை ஆயிரம்கோடிகளை மானியமாக கொடுத்தும், போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் ஓடுகின்றன என்ற, 'டவுட்' எழுதே... நிர்வாகம் பண்றவங்க சரியில்லையோ என்ற, 'டவுட்' எழுவதையும் தவிர்க்க முடியலை!



தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்: புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், ஓ.டி.டி.,யில் நான்கே வாரங்களில் வெளியாவதால், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால், பெரும் இழப்பு ஏற்படுகிறது. புதிய திரைப்படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகே, ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும்.

டவுட் தனபாலு: இன்னைக்கு எந்த படம், தியேட்டர்கள்ல, ரெண்டு வாரம் தாண்டி ஓடுது... நடுத்தர மக்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற மாதிரி டிக்கெட், நொறுக்கு தீனிகள் விலையை குறைத்தால், தியேட்டர்களை நோக்கி மக்கள் சாரை சாரையாக வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!







      Our Apps Available On




      Dinamalar

      Follow Us