Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்திரிகை செய்தி: தேர்தல் வாக்குறுதியின்படி, வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு வாய்ப்பு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஆனால், தி.மு.க., சார்பில் கமல் போட்டியிட வேண்டும் என்றும், தி.மு.க., - எம்.பி.,க்கள் வரிசையில், அவர் இடம்பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுவதாகவும், இதனால், கமல் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிகிறது.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தாலே, 'கட்டிப்புடி வைத்தியம்' பார்த்தே கட்சியை கரைச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... இப்படி ஆரம்பிச்சு, கடைசியில கமல் கட்சியையே தி.மு.க.,வுல ஐக்கியமாக வச்சிடுவாங்க என்பதிலும், 'டவுட்' இல்லை!



தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும், எனக்கு ஜூனியர் தான்' என, செங்கோட்டையன், தன் நண்பர்களுடன் பேசிய தகவல் வந்திருக்கிறது. இதில் இருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கு இருக்கும் சீனியர்கள் எந்தளவிற்கு ஆதங்கத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

டவுட் தனபாலு: தி.மு.க., விலும் உங்களை விட எத்தனையோ சீனியர்கள் இருக்காங்களே... அ.தி.மு.க.,வில் இருந்து வந்த நீங்க, மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மாவட்ட செயலர்னு பதவிப் படிகளில் ஏறிட்டே போவதும், சீனியர் தொண்டர்கள் கீழே நின்று குமுறுவதும், உங்க காதுல விழலையா என்ற, 'டவுட்' வருதே!





பீஹாரில், ஜன் சுராஜ் என்ற கட்சியை நடத்தி வரும், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர்: ஜன் சுராஜ் கட்சியை நடத்த எனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். என் அறிவுத்திறனால் எனக்கு பணம் வருகிறது. சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட எவருக்கும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.

டவுட் தனபாலு: அது சரி... சரஸ்வதி தேவியை அறிவுக்கான கடவுள்னு சொல்லுவாங்க... 'அது இல்லாத அரசியல்வாதிகளுக்கு என் அறிவால் வியூகம் வகுத்து, தேர்தலில் வெற்றி பெற வைக்கிறேன்... அவங்க கொட்டிக் கொடுக்கிற கோடிகள் எனக்கு கட்சி நடத்த உதவியா இருக்குது'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us