Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 01, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2026 03:05 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு ஏழு தொகுதிகள் தருவதாக கூறினர். ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லுார், சங்கரன்கோவில், நிலக்கோட்டை, வால்பாறை உள்ளிட்ட ஆறு தனி தொகுதிகளுடன், திருநெல்வேலி தொகுதியை கேட்டோம். அதற்கு, 'திருவிடைமருதுார் தொகுதியில் போட்டியிடுங்கள்' என அவர்கள் கூற, நாங்கள், 'சாத்தியமில்லை' என தெரிவித்தோம். பின், 'கூட்டணி பேச்சு நின்று போய்விட்டது' என, செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறினார். அரசியலில், ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் இருந்த அணுகுமுறை இப்போது இல்லை.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெ., உயிருடன் இருந்தப்ப, எந்த தேர்தல்லயாவது உங்க கட்சிக்கு ரெண்டு தொகுதிகளுக்கு மேல தந்திருக்காங்களா... பழனிசாமி லட்டு மாதிரி தந்த ஏழு தொகுதிகளை ஏற்க மறுத்தது, உங்களுக்கு தான் பெரிய இழப்பு என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

பத்திரிகை செய்தி: தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சிக்கு எட்டு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், காட்டுமன்னார்கோவில் - தனி தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவனும், கள்ளக்குறிச்சி - தனி தொகுதியில், திருமாவளவனின் சகோதரி மகள் மாலதியும் போட்டியிடுகின்றனர்.

டவுட் தனபாலு: திருமாவளவன் இப்ப சிதம்பரம் தொகுதி எம்.பி.,யா இருக்காரு... தி.மு.க., கொடுத்த எட்டு தொகுதிகளில், ரெண்டு சீட்களை அவரது குடும்பமே எடுத்துக்கிட்டா என்ன அர்த்தம்... நீண்டகாலமா தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால், அவர்களது குடும்ப அரசியல் சகவாசம் இவருக்கும் வந்துடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: -தவறுகளை கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்ட்கள், ஐந்து சீட்களுக்காக, தி.மு.க., கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, வாய் மூடி இருக்கின்றனர். எங்களை அடிமை கட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தான், கூட்டணி பேச்சு நடந்தது. தொகுதி பங்கீடு வேட்பாளர் பட்டியலும் அங்கு தான் அறிவிக்கப்பட்டது.

டவுட் தனபாலு: கூட்டணி கட்சிகளுக்கு, சீட்களுடன், தேர்தல் செலவுக்கு கோடி கோடியாக பணமும் தரும் வழக்கத்தை துவக்கி வச்சதே, உங்க முன்னாள் தலைவி ஜெ., தான்... அதைத்தான் தி.மு.க.,வும், 'காப்பி' அடிச்சிட்டு இருக்குது... இப்ப, உங்களுடன் கரம் கோர்த்திருக்கும் கட்சிகளுக்கு நீங்க பணம் தந்தீங்களா, தரலையா என்ற, 'டவுட்' வருதே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us