Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சொல்லியிருக்கிறார். மேலும், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என்றும் சொல்லி சென்று இருக்கிறார். அவர் உ.பி.,யில் எப்படி ஆட்சி நடத்தினார் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இன்று, உ.பி.,யில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளார். ஆனாலும், அவரை நாங்கள் வெறுக்கவில்லை.

டவுட் தனபாலு: மாயாவதி கருத்தின் உள்ளர்த்தம் உங்களுக்கு புரியலையா... 'தி.மு.க.,வினரை மாதிரி ஆட்சி நடத்தி தான், உ.பி.,யில் இன்று நான் ஓரங்கட்டப்பட்டிருக்கேன்... உங்களுக்கும் அந்த கதி வந்துடக் கூடாது'ன்னு அவங்க அபாய மணியை அடிச்சிட்டு போயிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



பத்திரிகை செய்தி: ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதை ஏற்பதாக பாரிவேந்தர், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்தனர்.

டவுட் தனபாலு: பரவாயில்லையே... அந்த கட்சியில் கூட, தோல்விக்கு பொறுப்பேற்று ஒரு நிர்வாகி ராஜினாமா பண்ணியிருக்காரு... ஆனா, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., போன்ற பெரிய பெரிய கட்சிகள்ல, தோல்விக்கு பொறுப்பேற்க யாருமே இல்லையா என்ற, 'டவுட்'தான் வருது!



காங்., தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே: நாட்டின் இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பதே, மத்திய பா.ஜ., அரசின் ஒரேயொரு நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்ததற்கு, மோடி அரசு தான் முழு பொறுப்பு. இது தான் உண்மை.

டவுட் தனபாலு: நாடு முழுக்க, காங்கிரசில் இருக்கும் பல கோடி இளைஞர்கள் ஆட்சி, அதிகாரம் கிடைக்காமல் கையை கட்டிட்டு சும்மா இருக்காங்களே... அவங்களை தான் வேலையில்லாம மோடி வச்சிருக்கார்னு விசனப்படுறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us