/தினம் தினம்/செய்தி எதிரொலி/ புதுப்பிக்கப்படும் நகராட்சி ரோடுகள் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி புதுப்பிக்கப்படும் நகராட்சி ரோடுகள் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
புதுப்பிக்கப்படும் நகராட்சி ரோடுகள் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
புதுப்பிக்கப்படும் நகராட்சி ரோடுகள் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
புதுப்பிக்கப்படும் நகராட்சி ரோடுகள் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
PUBLISHED ON : ஜூலை 05, 2024 12:00 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, சேதமடைந்த ரோடுகள், முழுவீச்சில் புனரமைக்கப்பட்டும், புதிய தார் ரோடு அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ரோடுகள், 147.78 கி.மீ., நீளம் கொண்டது. குறிப்பாக, நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள ரோடு மாநில நெடுஞ்சாலைத் துறை; 5 கி.மீ., நீளமுள்ள ரோடு தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாக பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கந்தசாமி பூங்கா ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில், நகராட்சி ரோடுகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டுநர்கள், ரோட்டை கடக்க முடியாமல் பரிதவித்து வந்தனர்.
இதை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட ரோடுகள், புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில், பள்ளங்கள், ஜல்லிக்கற்கள் கொட்டி மூடி, புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
கந்தசாமி பூங்கா ரோடு,பத்ரகாளியம்மன் கோவில் ரோடு சந்திப்பு பகுதியில், மெகா பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தை கடந்து செல்ல, ஆமை வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டியிருந்தது. கவனமின்றி பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்கி வந்தனர்.
குறிப்பாக, மழையின்போது, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நகரில், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும்.
ரோட்டோர ஆக்கிரப்பு, விதிமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் கண்டறிந்து தடுத்தால், போக்குவரத்து சீராக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.