/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தி எதிரொலி லோகோ அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி லோகோ அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி லோகோ அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி லோகோ அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி லோகோ அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு
PUBLISHED ON : ஜூலை 05, 2024 12:00 AM

திருப்பூர்:அல்லாளபுரம் பாலம் அருகே அணுகு சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது.
திருப்பூர் அடுத்த கரைப்புதுார் ஊரட்சியில் அல்லாளபுரம் உள்ளது. பொங்கலுார் சென்று சேரும் வகையில் அமைந்துள்ள இந்த ரோட்டில், அல்லாளபுரம் குட்டை அமைந்துள்ளது. இதனருகே தரை மட்டப் பாலம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
மழை நாட்களில் குளத்திலிருந்து நீர் வெளியேறும் போது, இந்த தரை மட்டப் பாலம் நீரில் மூழ்கி,போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் அண்மையில் இந்த இடத்தில் உயர் மட்டப்பாலம் கட்டி முடித்து திறக்கப்பட்டது.
பாலம் கட்டுமானப் பணி முடிந்தும் பாலத்தின் இரு பகுதியிலும் தலா 40 மீ., துாரம் உயர்த்தப்பட்ட இடத்தில் தார் ரோடு போடப்படவில்லை. ஜல்லி பரவிக்கிடந்த, ரோடு காரணமாக பெரும் சிரமம் நிலவியது. இது குறித்து சுட்டிக் காட்டி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக அங்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாகனங்கள் சிரமமின்றிக் கடந்து செல்கின்றன.
-------------
அல்லாளபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாலத்துக்கு, அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.