Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM


Google News
அறிவியல் ஆயிரம்

கண்ணாடி தயாரிப்பது எப்படி

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் வீடு, அலுவலக கட்டுமானங்களில் அழகு சேர்ப்பதற்காக பல்வேறு வகை கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக கண்ணாடி உற்பத்தி செய்வதற்கான அடிப்படைப் பொருள், மண். மாசற்ற துாய வெள்ளை நிறத்தில் கண்ணாடி வேண்டுமெனில் சிலிக்கா எனும் சிறப்பு மண்ணைப் பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்புக்கல், சோடா சாம்பலும் கண்ணாடி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள். பல்வேறு உலோக ஆக்சைடுகளைச் சிறிதளவு கலந்தால் பல்வேறு நிறங்களில் கண்ணாடிகளை உருவாக்கலாம்.

தகவல் சுரங்கம்

குளிரான கடல்

உலகின் முக்கிய ஐந்து பெருங்கடல்களில் சிறியது ஆர்க்டிக். இதன் பரப்பளவு 1.40 கோடி. சதுர கி.மீ. இது குளிரான கடல் எனவும் அழைக்கப்படுகிறது. சர்வதேச நீர்நிலையியல் நிறுவனம் இதை பெருங்கடல் என ஒப்புக்கொள்கிறது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே இக்கடல் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இக்கடல் பகுதி பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. கோடைகாலத்தில் 50 சதவீதம் உருகுகிறது. இதன் சராசரி ஆழம் 3406 அடி. இதை ஆர்க்டிக் மத்திய தரைக்கடல் என அழைக்கின்றனர். இதனடியில் நிறைய தனிமங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us