Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM


Google News
அறிவியல் ஆயிரம்

ஒரே விண்கலம்

சூரியக்குடும்பத்தில் ஏழாவது கோள் யுரேனஸ். சூரியன் - யுரேனஸ் துாரம் 293 கோடி கி.மீ. இதை 1781ல் பிரிட்டன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல் கண்டுபிடித்தார். இது சூரிய குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோள். இது மிக குளிர்ச்சியான வளிமண்டலத்தை கொண்டது. இங்கு வெப்பநிலை மைனஸ் 224 டிகிரி செல்சியஸ். இது ஒருமுறை சூரியனை சுற்றிவர 84 புவி ஆண்டுகள் ஆகிறது. இக்கோளுக்கு 27 நிலவுகள் உள்ளன. இதனை ஆய்வு செய்ய சென்ற ஒரே விண்கலம் 'வொயாஜர் 2'. இதை 1977ல் அமெரிக்காவின் நாசா அனுப்பியது.

தகவல் சுரங்கம்

பெரிய அணை

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் அமைந்துள்ள ஹிராகுட் அணை, இந்தியாவில் பெரியது. இது மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 1947ல் பணி துவங்கி 1957ல் நிறைவு பெற்றது. அணையின் உயரம் 200 அடி. அணையின் மொத்த நீளம் 25 கி.மீ. அணையில் 64 மதகுகள் உள்ளன. அணையிலிருந்து வினாடிக்கு 42,450 கன அடி நீர் திறக்கப்படும். நீர்பிடிப்பு பரப்பளவு 83 ஆயிரம் சதுர கி.மீ. இங்கு 375 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 75 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. 1979ல் இந்த அணை இடம்பெற்ற ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us