PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
விமான இருக்கையின் ரகசியம்
தரையில் நிற்கும் விமானத்தின் சமநிலையை பாதுகாக்க வால் பகுதி இருக்கையில் பயணிகளை முதலில் அனுமதிப்பதில்லை. விமானத்தின் சக்கரங்கள் அதன் அடிப்பகுதியில் முக்கோண அமைப்பில் பொருத்தப் பட்டுள்ளன. விமானத்தின் முன், நடுப்பகுதியில் அதன் இருபுற இறக்கைகளின் அடியில் சக்கரங்கள் உள்ளன. வால் பகுதியின் கீழ் சக்கரம் ஏதும் இல்லை. எனவே பின்பகுதியில் பயணிகளை முதலில் அமர்த்தினால் விமான சமநிலையில் பாதிப்பு வரும். அதே போல விமானத்தில் இருந்து இறங்கும் போது, பின்பகுதி பயணிகள் முதலில் இறக்கப்படுவர்.
தகவல் சுரங்கம்
வேட்டி தினம்
* தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிப்பது, கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்கும் நோக்கில் ஜன.6ல் வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன. 6ல் உலக போர் அனாதை தினம் கடைபிடிக்கப்படுகிறது.