PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நியூட்ரினோ என்பது என்ன
அணுவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் அணுத் துகள்கள் உள்ளன. இதில் புரோட்டான், நியூட்ரான் நுண்ணிய குவார்க்ஸ் எனும் துகளால் ஆனவை. அதுபோல மின்னேற்றம் இல்லாத மிகமிக நுண்ணிய ஒரு துகள்தான் நியூட்ரினோ. சூரியன் வளிமண்டலம், காஸ்மிக் கதிர்கள், ஏன் உரமூடைகள்கூட நொடிக்கு பல லட்சம் நியூட்ரினோக்களை உமிழ்கின்றன. மூன்று வகை நியூட்ரினோக்கள் உள்ளன. இதில் எது நிறை கூடியது, எது நிறை குறைவானது என நமக்குத் தெரியாது. இவை குறித்து நுட்பமாக ஆராய்ந்தால் மட்டுமே நியூட்ரினோவின் பயன்களை அறியமுடியும்.
தகவல் சுரங்கம்
சுவரில் பல்லி நடப்பது எப்படி
வீடுகளில் பல்லிகள் செல்வதை பார்த்திருப்போம். பூமியில் பூச்சி இனங்கள் அதிகம் உள்ளன. இதை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வகையில் இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல்லிகள் நமக்கு உதவுகின்றன. அதுபோல பல்லியின் பாதம், விரல்களில் செதில்கள் போன்ற சிறிய ரோமங்கள் உள்ளன. இவை சுவரிலோ, மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன. இதனால் பல்லி கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது.