PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

தாமரை மிதப்பது எப்படி
குளம், ஏரி உள்ளிட்ட நன்னீர் இடங்களில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் தாவரங்கள் என அழைக்கப் படுகிறது. நீர்வாழிடம் என்பது நிரந்தரமாக அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்த பகுதியை உள்ளடக்கியது. நீர்வாழ் தாவர இனங்களில் ஒன்று தாமரை. இதன் இலை தண்ணீரில் மிதக்கும். அதன் இலைக்காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் தான், இவை மிதக்க உதவுகின்றன. இவற்றின் வேர்களின் வளர்ச்சி குறுகியவை. இந்தியாவின் தேசிய மலர் தாமரை. இது பிங்க், வெள்ளை என இரு நிறங்களில் காணப்படுகிறது. வியட்நாமின் தேசிய மலரும் இதுதான்.