PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

நிலத்தடி நீர் கிடைக்குமா...
பூமியின் நிலத்தடி நீர் 2100க்குள் 50 கோடி பேருக்கு குடிப்பதற்கு ஏற்ற தரத்தில் இருக்காது என ஆய்வு எச்சரித்துள்ளது. குளம், அணை, ஏரி உள்ளிட்ட நன்னீர் வசதி கிடைக்காதவர்களுக்கு பூமிக்கு கீழே இருக்கும் நிலத்தடி நீரே பிரதானம். உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் நிலத்தடி நீரை சார்ந்து உள்ளனர். ஏற்கனவே 3 கோடி பேர் வசிக்கும் இடத்தில் நிலத்தடி நீர் தரமானதாக இல்லை. இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பநிலை உயர்வு காரணமாக 21ம் நுாற்றாண்டு இறுதிக்குள் ௫௦ கோடி பேருக்கு நிலத்தடி நீர், குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.