PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
மரங்கொத்தியின் ரகசியம்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தவிர அனைத்து இடங்களில் மரங்கொத்தி பறவைகள் வாழ்கின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இது மரங்களை கொத்தும் இயல்புடையவை. இதற்கு காரணம் இதன் உணவாக விதை, பூச்சி, பழங்கள் உள்ளன. மரப்பட்டைகளில் உள்ள சிறிய பூச்சிகளை சாப்பிடத்தான் இப்படி செய்கின்றன. இதற்கேற்ப அதன் அலகு கூர்மையாக, பலமாக உள்ளது. மரப்பொந்தில் உள்ள பூச்சியை பிடிக்கும் விதமாக இதன் நாக்கு நீளும் தன்மை உடையது. வினாடிக்கு20 முறை கொத்தும். 95 சதவீத மரங்கொத்திகள் மரங்களில் வசிக்கின்றன.
தகவல் சுரங்கம்
சிறுகோள் தினம்
சூரியனை சுற்றிவரும் பூமி, செவ்வாய் போன்ற கோள்களைப்போல விண்கல் என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை கோள்களை விட மிகச்சிறியது. 1908 ஜூன் 30ல் ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் கீழே விழுந்தது. 2150 சதுர கி.மீ., சுற்றளவு பரப்பளவில் இருந்த 8 கோடி மரங்கள் தரைமட்டமாகின. இந்நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 30ல் உலக சிறுகோள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கம். விண்வெளியில் 10 லட்சம் சிறுகோள்கள் சுற்றுகின்றன.