PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
துருப்பிடிக்காத இரும்பு
சமையல் அறை பாத்திரங்களில் பெரும்பாலும் துருப்பிடிக்காத இரும்பால் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) ஆனவை. இது தனி உலோகம் இல்லை, கலப்பு உலோகம். இரும்பையும் குரோமியத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' கிடைக்கிறது. இதை பிரிட்டனின் ஹாரி பிரியர்லி 1913ல் கண்டுபிடித்தார். இவர் பீரங்கிக் குழாய்கள் துருப்பிடிப்பதை தடுப்பதற்காக, பல உலோகங்களை உருக்கிக் கலந்து தொடர்ந்து ஆய்வு செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல வகைகள் உண்டு.
தகவல் சுரங்கம்
வறட்சி ஒழிப்பு தினம்
உலகில் ஆண்டுக்கு 5.5 கோடி பேர் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். இது 2050ல் மூன்றில் ஒரு பங்காக மாறும். ஏற்கனவே உலகில் 230 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக 1900 முதல் 2019ல் 270 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 1.17 கோடி பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலத்துக்காக ஒருங்கிணைவோம். நமது மரபு. நமது எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.