sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ காலம் மாறிப்போச்சு!

 காலம் மாறிப்போச்சு!

 காலம் மாறிப்போச்சு!

1


PUBLISHED ON : மார் 12, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2026 01:58 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கட்சி கலாசாரம், பாரம்பரியத்தை எல்லாம் இப்போது அனைவரும் மறந்து விட்டனர்...' என கவலைப் படுகின்றனர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர், கதராடைகளைத் தான் அணிந்தனர். வட மாநிலங்களைச் சேர்ந்த காங்., தலைவர்கள், வெள்ளை நிற குர்தாவும், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெள்ளை சட்டை, வேஷ்டியும் அணிவர்.

வயது வித்தியாசம் இன்றி, மூத்த தலைவர்கள் முதல், இளம் வயது நிர்வாகிகள் அனைவரும் இந்த உடை கலாசாரத்தையே பின்பற்றினர்; ஆனால், சமீபகாலமாக இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், வித விதமான நிறங்களில் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிகிறார். பார்லிமென்டிற்கு கூட, இதுபோன்ற உடைகளைத் தான் அணிந்து வருகிறார்.

கோடை காலங்களில், டி - ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிகிறார். கட்சி நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், பேரணி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ராகுல் இப்படித்தான் வருகிறார்; மறந்தும் கூட, கதராடை அணிவது இல்லை. ராகுலை பின்பற்றி, காங்கிரசின் மற்ற எம்.பி.,க்களும் இதுபோல் கலர் கலரான உடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.

இதைப் பார்த்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 'காலம் மாறிப்போச்சு...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us