Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ சோதனைக்காலம்!

 சோதனைக்காலம்!

 சோதனைக்காலம்!


PUBLISHED ON : மார் 11, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2026 01:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இவரது ஆட்சியில் எப்படி காலம் தள்ளப் போகிறோமோ...' என கவலைப்படுகின்றனர், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகள்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ரேவந்த் ரெட்டி நிர்வாக விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பானவர். அரசு அலுவலகங்களில் ஒழுங்காக வேலை நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில், உயர் பதவிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மீது, சமீபகாலமாக அதிகமான புகார்கள் வந்ததால், முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கோபத்தில் உள்ளார்.

இதையடுத்து, அலுவலகத்துக்கு அடிக்கடி தாமதமாக வருபவர்கள், வேலை நேரத்தில் வெட்டி அரட்டை அடிப்பவர்கள், வேலை செய்யாமல், அலுவலகத்தில் அமர்ந்து சொந்த வேலையை பார்ப்பவர்கள், கோப்புகளை தேக்கி வைத்திருப்பவர்கள் என, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பட்டியல், முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது.

இவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்ப, முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'இது நமக்கு சோதனைக்காலம் போலும்...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us