உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன?

இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன?


'கருப்பு' படத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் போராட்ட காட்சியில், அதாவது, பணம் கொடுத்து போலீசுக்கு எதிராக வக்கீல் ஆர்.ஜே.பாலாஜி சிலரை போராட வைக்கும் காட்சியில் 'போராடடா வாளேந்தடா' பாடல் ஒலிக்கும். அடுத்த சீனில் இது இளையராஜா பாடல், அவர் கேஸ் போடப்போறாரு. பாட்டை நிறுத்துங்க என்பது போல ஆர்.ஜே.பாலாஜி பேசுவார்.

சில நாட்களாக இந்த பாடலுக்கு, இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு. காரணம். அந்த பாடலின் பின்னணி அப்படி. 'அலை ஓசை' படத்தில் விஜயகாந்த் பாடும் பாடல் அது. இளையபாரதி எழுத இளையராஜா இசையமைத்து இருந்தார். மலேசியா வாசுதேவன், இளையராஜா பாடியிருந்தனர். 1985ல் அந்த பாடல் வெளியானாலும், அந்த பாடல் இன்றும் தென் மாவட்டங்களில் கோயில் நிகழ்ச்சிகளில், முக்கிய விழாக்களில் பாடப்படுகிறது.

குறிப்பாக, நையாண்டி மேளம் பின்னணியில் அந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பாடலை தங்கள் விடுதலை பாடலாக, தன்னம்பிக்கை பாடலாக குறிப்பிட்ட சமூக மக்கள் நினைக்கிறார்கள். அந்த சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறுகிறது. மாரி செல்வராஜ் இயக்க, தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்திலும் இந்த பாடல் வரும். குறிப்பாக, இந்த பாடலில்,

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
வேர்வை குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும்

- என்ற வரிகளையும் ஆர்.ஜே .பாலாஜி கிண்டல் செய்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்பதுபோல பிரச்னையை முடித்து இருக்கிறார்களாம் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !