ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173வது படம் உருவாகிறது என்கிற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சமீபத்தில் ரஜினி 173வது படத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி வெளியேறியுள்ளார், அவருக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து ரஜினி 173வது படத்தை இயக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.
இதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி மற்றும் அஸ்வத் மாரிமுத்து என இருவருக்குமே ரஜினிகாந்த் ஒரு வாய்ப்பு தந்துள்ளார். இருவர் கதையில் யார் கதை பிடித்துள்ளதோ அதில் நடிப்பார் என உறுதியான தகவல் கிடைத்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, ரஜினி 173வது படத்தை அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்தில் தொடங்குவதற்கு பணிகளை அஸ்வத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும், வருகின்ற நாட்களில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.