புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்
ADDED : 5 hours ago
சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள 'கருப்பு' படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரிஷாவின் ஆடை வடிவமைப்பாளராக ஹர்ஷேன் என்பவர் அவரது உடை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், திரிஷாவுக்கு எப்போதுமே எளிமையான தென்னிந்திய உணவுகளை பிடிக்கும். குறிப்பாக பருப்பு ரசம் மற்றும் சாம்பார் போன்ற தமிழ் உணவுகளை அவர் விரும்பி உண்பார். அதோடு, உள்நாட்டு ஆடை பிராண்டுகளை அணிய விரும்பும் திரிஷா, இந்திய புடவைகளின் மீது மிகுந்த பிரியம் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.