சார்மி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
சார்மி
🎂17 May 1987· 39 years
3
🎬Films
50
📷Photos
39
🎂Age
பற்றி
சீக்கியரான சார்மி கவுர், மும்பையில், 1987ம் ஆண்டு, மே 17ம் தேதி பிறந்தவர். தனது 15வயதில், நீ தொடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சார்மி, முதல்படத்தில் இல்லத்தரசியாக நடித்தார். அதன்பிறகு தமிழில், சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கிற்கு சென்ற சார்மிக்கு அங்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையா வலம் வந்தார். சார்மி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் சார்மி.